இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் தஞ்சமடைந்த 16 பேரையும் மண்டபம் அகதி முகாமில் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கில் இருந்து 22ஆம் திகதி ஒரே நாளில் 16 பேர் தமிழ்நாட்டுக்குத் தப்பிச் சென்றனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் மன்னாரைச் 6 பேர் இன்று காலை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோது புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில், இன்று மாலை தமிழ் நாடு அரசின் சிபார்சுக்கமைய ஈழத்தில் இருந்து வருபவர்களை நீதிமன்றில் நிறுத்தாது நேரடியாக மண்டபம் அகதி முகாமுக்குக் கொண்டு சென்று தங்க வைக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்கமைய வவுனியாவைச் சேர்ந்த 10 பேரும் இன்று மாலை மண்டபம் அகதி முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.
Leave a comment