இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ பால்மாவின் விலை 1345 ரூபாவில் இருந்து 1945 ரூபாவாகவும், 400 கிராம் பொதியின் விலை 540 ரூபாவிலிருந்து 800 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவிற்கு வழங்கிய அறிவித்தலின் படி பால் மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் ஒரு கிலோ பால் மாவின் விலை 2.80 அமெரிக்க டொலர்கள் இருந்த நிலையில் தற்போது 5.30 அமெரிக்க டொலர்களாகவும், டொலர் ஒன்றின் பெறுமதி அதிகரிப்பாலும் இவ்வாறு விலை அதிகரிக்கப்படவுள்ளது.
இதையடுத்து, நாட்டின் பெரும்பாலான இடங்களில் பால் மாவுக்குத் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக அங்கர், ரத்தி ஆகிய பால் மாவுக்கே அதிக தட்டுப்பாடு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
Leave a comment