1
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு ஆதரவளிக்குமா சர்வதேச நாணய நிதியம்?

Share

இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் பேச்சுகளை ஆரம்பிக்கவுள்ளது எனச் சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் கெரி ரைஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சென்யோங்-ரி கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைச் சந்தித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருடன் கலந்துரையாடிய போதிலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் நிவாரணத்துக்காக இலங்கை இன்னும் விண்ணப்பிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கோரிக்கை விடுக்கப்பட்டால், அதைப் பரிசீலிக்கலாம் என்று சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது.

எவ்வாறாயினும், அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை உத்தியோகபூர்வ பேச்சுக்களை நடத்தவுள்ளதாக முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும் அமெரிக்காவுக்கு விஜயம் செய்யவுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டமொன்றுக்கு வருவதினூடாக, இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பை அதிகரிக்கவும், வளர்ச்சியை நிலையான திசையில் செலுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...