அரசுக்கு எதிராக ஐ.தே.க. 25 இல் சத்தியாக்கிரகப் போராட்டம்!

ranil mp

ஐக்கிய தேசியக் கட்சியின் சத்தியாக்கிரகப் போராட்டம் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியுமே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் ஐ.தே.கவுக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version