மலையகத்தில் மாவுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் லயன் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக பொகவந்தலாவை, சாமிமலை, மஸ்கெலியா, டயகம போன்ற தோட்ட பிரிவுகளைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தோட்டத் தொழிலாளர்கள், தமது பகுதியில் கோதுமை உணவு தட்டுப்பாடு நிலவுவதால் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றோம்.
தமது பிரதான உணவாக கோதுமை மா இருப்பதாகவும் கோதுமை மாவு தட்டுப்பாடு காரணமாக கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அப்பகுதி வியாபாரிகளிடம் வினவியபோது,
கோதுமை மாவு கையிருப்பு கிடைக்காதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒரு சில நாட்களில் இது சீர் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Leave a comment