கொரோனாத் தொற்று – யாழில் மூவர் உயிரிழப்பு!!
யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி, ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும், சுன்னாகம், ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுப் பெண் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கொரோனாத் தொற்றால் உயிரிழந்த பல்கலைக்கழக ஊழியர் அனுமதி பகுதியில் பணியாற்றுபவர் என்று கூறப்படுகின்றது.
இந்த உயிரிழப்புகளுடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 155 ஆக உயர்ந்துள்ளது.
Leave a comment