திட்டமிட்டபடி பாடசாலைகள் திறக்கப்படா – கல்வி அமைச்சர் தெரிவிப்பு
நாட்டில் கொரோனாத் தொற்று வேகம் அதிகரித்துவரும் நிலையில் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீளத் திறக்கத் திட்டமிட்டப்பட்டிருந்தது. இருப்பினும் தற்போது அதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
பாடசாலைகளை விரைவாக மீளத் திறப்பது தொடர்பாக அரசு கவனம் செலுத்திய நிலையில், அதற்கான முன்னாய்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். இருப்பினும் தற்போதைய நிலைமைகளின்படி, செப்ரெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது சாத்தியம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
Leave a comment