rtjy 260 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கிடைக்கவுள்ள தொடருந்து இயந்திரங்கள்

Share

இலங்கைக்கு கிடைக்கவுள்ள தொடருந்து இயந்திரங்கள்

ஏறக்குறைய 20 தொடருந்து இயந்திரங்களை இந்தியா – இலங்கைக்கு வழங்கும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார தொடருந்துகளை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், சேவையில் இருந்து நீக்கம் செய்யப்படும் இயந்திரங்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த இயந்திரங்கள் இலங்கையில் இயங்குவதற்கு ஏற்றதா என்பதை கண்டறியும் வகையில் தொழில்நுட்பக் குழுவொன்றை எதிர்வரும் காலங்களில் இந்தியாவுக்கு அனுப்ப தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன் பின்னரே குறித்த தொடருந்து இயந்திரங்களை ஏற்றுக்கொள்வதா அல்லது இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
21 10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் உள்ள தாதியர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் மிக விரைவில் தாதியருக்கான பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை...

22 9
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு ஒன்று அடுத்த மாதம்...

20 15
இலங்கைசெய்திகள்

மகிந்தவை திடீரென சந்திக்க சென்ற ரணில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்....

19 14
இலங்கை

உள்ளூராட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற ரணிலை சந்தித்த எதிர்க்கட்சிகள்

உள்ளூராட்சி மன்றங்களின் கூட்டு நிர்வாகத்தை அமைப்பது குறித்து விவாதிக்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும்...