மோ.சைக்கிள் விபத்தில் மாணவர்கள் பரிதாபச் சாவு!

unnamed e1650193509535

தம்புள்ளை – வேமடில்ல குளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் மேலும் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி குளத்தில் வீழ்ந்துள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிழில் 2 மாணவர்கள் உள்ளடங்கலாக நால்வர் பயணித்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் உயிரிழந்த 16 வயதுடைய மாணவர்கள் இருவரும் கலேவெல, புவக்பிட்டிய, நபடகஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

விபத்தில் படுகாயமடைந்த 18 மற்றும் 16 வயதுடைய ஏனைய இரு மாணவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் மேலும் குறிப்பிட்டனர்.

#SriLankaNews

Exit mobile version