தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தியாகி அறக்கொடை நிறுவுநர் வாமதேவா தியாகேந்திரன் மூவின மக்களுக்கும் நிதி உதவி வழங்கியுள்ளார்.
நாடு பொருளாதாரா நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் வேளையில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்டு வாழும் மக்களுக்கு சுமார் இரண்டு கோடிக்கும் அதிகமான நிதி பகிர்ந்தளிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தின் வவுனியா, அனுராதாவுஞ் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் மூவின மக்களுக்கே இந்த உதவி தியாகி அறக்கொடை நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது.
தியாகி அறக்கொடை நிறுவுநரால் பல்வேறுபட்ட சமூக நல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவர்களால் வழங்கப்பட்ட இந்த உதவியும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
#SriLankaNews