நெடுந்தீவில் கடற்படையின் இரு படகுகள் மோதல்! – சிப்பாய் ஒருவர் மாயம்

கடற்படையின் இரு படகுகள்

யாழ்., நெடுந்தீவு கடல் பகுதியில் கடத்தல் படகுகளை விரட்டிய கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படைச் சிப்பாய் காணாமல்போயுள்ளார்.

இந்திய திசையில் இருந்து இலங்கைக் கடற்பரப்புக்கில் ஒரே சமயம் உள்நுழைந்த இலங்கையைச் சேர்ந்த 3 படகுகளை கடற்படையினரின் இரு படகுகள் விரட்டியுள்ளன. இதன்போது ஒரு கடத்தல் படகு பிடிப்பட்டபோதும் இரு படகுகள் தப்பியுள்ளன. இதேநேரம் கடற்படையினரின் இரு படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது. இந்த விபத்தின்போது படகில் இருந்த 4 கடற்படையினர் கடலில் தவறி வீழ்ந்துள்ளனர்.

இவ்வாறு கடலில் வீழ்ந்த 4 கடற்படையினரில் மூவர் மீட்கப்பட்டபோதும் ஒரு கடற்படைச் சிப்பாய் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் கடற்படையினரின் தேடுதல் தொடர்கின்றது.

#SriLankaNews

Exit mobile version