13 10
இலங்கைசெய்திகள்

யாழில் அநுரவின் பெயரில் நடந்த மோசடி: யாழ். நெல்லியடியில் சிக்கிய மதபோதகர்

Share

யாழ்ப்பாணம் (Jaffna) – நெல்லியடிப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் அநுரகுமார திசாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பெயரைப் பயன்படுத்தி நிதிசேகரிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என தன்னை அறிமுகப்படுத்திய மதபோதகர் ஒருவரும் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், “கடந்த ஒரு வாரகாலமாக தேசிய மக்கள் சக்தியினையும் அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் பயன்படுத்தி தம்மை மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என அறிமுகப்படுத்தி குறித்த இருவரும் நிதிசேகரிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று நெல்லியடி நகரில் நிதி சேகரிப்பில் ஈடுபட்ட போது நிதி வழங்க மறுத்தவர்களை அநுரவின் பெயரைக் கூறி ஒளிப்படத்தைக் காண்பித்து அச்சுறுத்தி நிதியை வலுக்கட்டாயமாக பெற முற்பட்ட போது வர்த்தகர்களுக்கும் அவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அங்கு கூடிய வர்த்தகர்கள் குறித்த நபர்களை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்க்கொண்டு நெல்லியடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் குறித்த நபர்களை கடுமையாக எச்சரித்து விட்டு விடுவித்துள்ளனர்.

நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் என்று தன்னை அறிமுகப்படுத்தியதுடன் சிறுவர்களைப் பராமரிப்பதற்காகவே இந்த நிதியை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் அதற்கான பற்றுச் சீட்டுக்கள் எவற்றையும் வழங்கவில்லை.

இதேவேளை நிதி கொடுக்க மறுத்தவர்களை எலிக்காய்ச்சல் வந்து இறப்பாய் என்றும், அநுரவை நான் தான் யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்தேன் எனவும் அநுர ஆட்களைப் பற்றித் தெரியும் தானே என அச்சுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த மதபோதகர் கடந்த காலங்களில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) பிரசார மேடைகளில் ஆசியுரைகளை கூறியதுடன் அநுர அரசுக்கு ஆதரவு கோரி ஆசியுரைகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தித்வா புயல் பாதிப்பு: இழப்பீடுகளை விரைவாக வழங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய உத்தரவு!

தித்வா (Tithwa) புயலால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையை எவ்விதத் தாமதமுமின்றி விரைவாக...

world 43
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் உயர்கிறதா மின் கட்டணம்? அதிகரிப்பைக் கோருகிறது தேசிய அமைப்பு இயக்குநரகம்!

இலங்கை மின்சார சபை (CEB) கலைக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட அரசிற்குச் சொந்தமான தனியார் நிறுவனமான தேசிய...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உள்ளூர் தொழில்களை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு:  ஜனாதிபதி அநுரகுமார உறுதி!

உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதும், அவற்றை வலுப்படுத்துவதுமே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுரகுமார...

world 41
செய்திகள்இலங்கை

இந்தியா – இலங்கை கடல்சார் உறவில் புதிய மைல்கல்: கொழும்பு கப்பல் கட்டும் தளத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பு...