8
இலங்கைசெய்திகள்

சிறைச்சாலையிலுள்ள பெண் மரண தண்டனைக் கைதிகள்: வெளியான தகவல்

Share

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 19 பெண்கள் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள பத்து சிறைச்சாலைகளில் மொத்தமாக 1,529 பெண் கைதிகள் உள்ளனர்.

இவர்களில் தண்டனைக் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்கள் அடங்குவர்.

இதனடிப்படையில், மரண தண்டனைக் கைதிகளாக 19 பெண்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக 24 பெண்களும் தண்டனைக் கைதிகளாக (உறுதிப்படுத்தப்பட்ட) 225 பெண்களும் மற்றும் விளக்கமறியலில் 1,304 பெண்களும் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
11 1
இலங்கைசெய்திகள்

இலங்கையில் 100 பள்ளிகளை நவீனமயமாக்க ஜப்பான் இணக்கம்

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,...

12 1
உலகம்செய்திகள்

அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிப்பு

நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான முரண்பாடுகள் காரணமாக அமெரிக்க அரசாங்கம் முடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் குடியரசு கட்சிக்கும்...

13 1
இலங்கைசெய்திகள்

லிட்ரோ எரிவாயு விலைதிருத்தம் குறித்து வெளியான தகவல்

மாதாந்திர எரிவாயு விலை திருத்தத்திற்கு அமைய இந்த மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் நிறுவனம்...

14
இந்தியாசெய்திகள்

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ட குடும்பங்களுக்கு முக்கிய தகவல்

கரூர் துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான பள்ளி, கல்லூரிச் செலவுகளை ஏற்கவும், எங்கள் குழுமத்தில்...