இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் தற்போது 19 பெண்கள் மரண தண்டனைக் கைதிகளாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை சிறைச்சாலைகள் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் உள்ள பத்து சிறைச்சாலைகளில் மொத்தமாக 1,529 பெண் கைதிகள் உள்ளனர்.
இவர்களில் தண்டனைக் கைதிகள் மற்றும் விளக்கமறியலில் உள்ளவர்கள் அடங்குவர்.
இதனடிப்படையில், மரண தண்டனைக் கைதிகளாக 19 பெண்களும் ஆயுள் தண்டனைக் கைதிகளாக 24 பெண்களும் தண்டனைக் கைதிகளாக (உறுதிப்படுத்தப்பட்ட) 225 பெண்களும் மற்றும் விளக்கமறியலில் 1,304 பெண்களும் உள்ளனர்” என அவர் தெரிவித்துள்ளார்.