யாழில் இருந்து கடல் வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் கைது!

6e6b63f1 1b46 4101 9957 b47e37923d74

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டொன்று செல்ல முற்றபட்டதாக தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Exit mobile version