முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட 17 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து கொழும்பு கோட்டை நீதிவான் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 9ஆம் திகதி கொழும்பு – காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினரால் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த கோட்டை நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, ரோஹித அபேகுணவர்தன, சி.பி.ரத்நாயக்க மற்றும் சனத் நிஷாந்த ஆகியோரும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.
மேலும், மேல் மாகாணத்துக்கும் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
#SriLankaNews