யாழில் 20 நாளில் 16 இலட்சம் லீட்டர் பெற்றோல் விநியோகம்!

sunshine coast filling up car

யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், ஒக்டேன்- 92 பெற்றோல் 16 இலட்சத்து 10ஆயிரத்து 400 லீட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

அதேவேளை இக் காலப் பகுதியில் டீசல் 8 இலட்சத்து 81 ஆயிரத்து 100 லீட்டரும் மண்ணெண்ணெய் 4 இலட்சத்து 48 ஆயிரத்து 800 லீட்டரும் சூப்பர் டீசல் ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 400 லீட்டரும் விநியோகிக்கப்பட்டுள்ளது. பெற்றோல் ஒக்டேன் 95 அக் கால பகுதியில் விநியோகிக்கப்படவில்லை.

அதேவேளை 14ஆம் திகதிக்கு பின்னர் மண்ணெணெய் விநியோகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை..

அத்துடன் பெற்றோல் கடந்த 14ஆம் திகதி அதிக பட்சமாக ஒரே நாளில் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 200 லீட்டர்
விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் , 20ஆம் திகதியும் ஒரு இலட்சத்து 65 லீட்டர் பெற்றோல் விநியோகிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version