வவுனியா – ஓமந்தை – கோலியகுளம் பகுதியில் வைத்து ஆவா குழு என அழைக்கப்படும் சட்டவிரோதக் குழுவின் 16 உறுப்பினர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று அவர்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஆவா குழுவின் உறுப்பினர்கள் விருந்து நிகழ்வொன்றை நடத்தவுள்ளனர் என்று பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது குறித்த 16 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 15 பேர் 30 வயதுக்குக் குறைவானவர்கள் என்று ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#SriLankaNews