இலங்கைசெய்திகள்

வெளிநாடு சென்ற பொறியியலாளர்கள்: மின்சார சபை கடும் நெருக்கடி

Share
tamilni 312 scaled
Share

வெளிநாடு சென்ற பொறியியலாளர்கள்: மின்சார சபை கடும் நெருக்கடி

இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த 159 பொறியியலாளர்கள் இரண்டு வருடங்களுக்குள் வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தனுஷ்க பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதில் 105 பொறியியலாளர்கள் தமது சேவையை விட்டு விலகியுள்ளதுடன் மேலும் 54 பேர் உத்தியோகபூர்வ விடுமுறை பெற்று சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நிர்வாக சபையில் பணிபுரிந்து மிகவும் சிக்கலான கடமைகளில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த பொறியியலாளர்கள் தமது பணியை மேலும் துறந்தால் இலங்கை மின்சார சபை கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும்.

விடுமுறையில் வெளிநாட்டில் இருக்கும் ஏராளமான பொறியாளர்கள் தங்களுடைய நிரந்தர வதிவிட அனுமதிப் பத்திரம் பெறுவதற்காக பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

அதன் காரணமாக அவர்கள் மீண்டும் பணிக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை இல்லை.

வெளிநாட்டில் ஒரு புதிய பொறியாளர் மாதம் சுமார் 4,000 டொலர்கள் சம்பளம் பெறுவதுடன், அனுபவம் வாய்ந்த பொறியாளர் சில நாடுகளில் மாதம் 6,000 முதல் 8,000 டொலர்கள் வரை சம்பளம் பெறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...