இலங்கைசெய்திகள்

நீர்கொழும்பில் சிறுமி ஒருவருக்கு மற்றுமொரு பெண்ணால் மோசமான அனுபவம்

Share
tamilni 529 scaled
Share

நீர்கொழும்பில் சிறுமி ஒருவருக்கு மற்றுமொரு பெண்ணால் மோசமான அனுபவம்

நீர்கொழும்பில் சிறுமி ஒருவரை தவறான செயலுக்கு உட்படுத்திய விவகாரம் தொடர்பில் 17 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றுக்கு அழைத்து சென்று அந்த சிறுமி தவறான செயலுக்கு உட்படுத்தபட்டுள்ளார்.

சந்தேகநபரான 17 வயது யுவதி , சிறுமியின் தாய் வீட்டில் இல்லாதபோது சிறுமியின் காதலனை சந்திக்க அழைத்து செல்வதாக கூறி சிறுமியை நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் சிறுமி குறித்த யுவதியிடம் கேட்டபோது, இது மசாஜ் நிலையம் என அவர் தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் மசாஜ் நிலையத்தில் இருந்து திரும்பிய நிலையில் காதலனை சந்தித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த சிறுமி ஊர் திரும்பி பொலிஸ் நிலையத்துக்கு சென்று மசாஜ் நிலையத்தில் தான் எதிர்கொண்ட நிலைமை தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பாததால் சிறுமியின் தாய் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் சிறுமியை வைத்தியசாலைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் மற்ற யுவதியை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...