24 மணிநேரத்தில் 15 பேர் பரிதாப மரணம்!

கொழும்பில்

இலங்கையின் பல பகுதிகளிலும் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் இன்று மாலை தெரிவித்தனர்.

வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கில் ஒன்பது பகுதிகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.

விபத்துக்களில் சிக்கிய மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

கவனயீனமாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்களுக்கான காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version