யாழ்ப்பாணம் – எழுவைதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் குறித்த மீனவர்களிடம் இருந்து 2 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த மீனவர்கள் மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
அதன் பின்னர் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வள துறை அதிகாரிகள் ஊடாக இந்திய மீனவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment