24 66926be0cb492
இலங்கைசெய்திகள்

13 மணித்தியால மின்வெட்டு : பதவியேற்ற பின்னர் நிலைமையை மாற்றியமைத்த ரணில்

Share

13 மணித்தியால மின்வெட்டு : பதவியேற்ற பின்னர் நிலைமையை மாற்றியமைத்த ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) 2022ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட போது நாட்டில் 13 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது. ஆனால் ஆறு மாதங்களுக்குள் அந்த நிலைமையை அவர் மாற்றியமைத்தார் என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான சாகல ரத்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் LTL வர்த்தக குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் இன்று (13) கலந்துகொண்டு உரையாற்றிய போதே சாகல ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு LTL வர்த்தக நிறுவனத்தினால் ருன்வெலி மகா சாயவில் மின்சார ஒளிக் கட்டமைப்பொன்று நிறுவப்பட்டது. அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக அந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

LTL நிறுவனம் மின்சார சக்தி துறையில் பாரிய வேறுபாடுகளை ஏற்படுத்திய நிறுவனம். இலங்கை தனது தொழிலை ஆரம்பித்து சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் அர்பணிப்பே அதற்கு காரணமாகும்.

2002 ஆம் ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்ட வேளையில் 18 மணித்தியால மின்வெட்டு காணப்பட்டது.

அடுத்து, 2022 ஆம் ஆண்டில் அவர் ஜனாதிபதியாக பதவியேற்ற வேளையில் 13 மணித்தியால மின் வெட்டு காணப்பட்டது. ஆனால் ஆறு மதங்களுக்கு அந்த நிலைமையை மாற்றியமைத்து நாட்டில் நல்ல நிலைமையை ஏற்படுத்த ஜனாதிபதியால் முடிந்தது.

மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை விரிவுபடுத்த இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக கிடைத்திருக்கிறது.

அதன்படி 100 மில்லியன் டொலர்கள் பெறுமதியானதாக மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை பலப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...