பால் ஒவ்வாமையால்13 சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

download 22 1

குடித்த பாலினால் ஒவ்வாமை ஏற்பட்டு 13 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கிளிநொச்சி, பாரதிபுரம் பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் வலய பணிமனையால் வழங்கப்பட்ட பாலினால் குறித்த ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.

வீட்டுக்கு சென்ற குழந்தைகள் வாந்தி உள்ளிட்ட அறிகுறிக்குள்ளாகினர். இதனால் அச்சமடைந்த பெற்றோர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில் 13 சிறார்கள் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொடர்ந்தும் விடுதியில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

குறித்த பால் பக்கட் காலாவதி ஆகவில்லை எனவும் பரிசோதனைக்காக பொரளையில் உள்ள பரிசோதனை நிலையத்துக்கு உடனே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்தியசாலை பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

#srilankaNews

Exit mobile version