சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

25 683ab525685f7

இந்த மாதம் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

கடந்த வருடம் மே மாதத்துடன் ஒப்பிடும்போது, ​சுற்றுலா பயணிகளின் வருகையில் 7.1% அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 42,899 இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய இராச்சியம் (8,382), சீனா (7,965) ஜெர்மனி, பங்களாதேஷ் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

Exit mobile version