15 26
இலங்கைசெய்திகள்

கொழும்பு வாழ் மக்களுக்கு அவசர அறிவிப்பு

Share

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் 25ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10:00 மணிக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை 8 மணி முதல் இரவு 8 வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நகரத்திற்குள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க, பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான தண்ணீரை சேகரித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு 1 முதல் 15 வரை, கோட்டை, கடுவெல, பத்தரமுல்ல, கொலன்னாவை, கொட்டிகாவத்த, முல்லேரியாவ, ஐடிஎச், மகரகம, தெஹிவல, கல்கிஸ்ஸ, ரத்மலானை மற்றும் மொரட்டுவ ஆகிய பகுதிகளில் குறித்த நீர்விநியோக தடை ஏற்படும்.

Share
தொடர்புடையது
25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...

18 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு: பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தகவல்!

2025-ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ்...