சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என 11 கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை இம்மாதம் 10ஆம் திகதி இடம்பெற்றது.
புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி நியமித்துள்ளதாலும், இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்டாததாலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment