காபந்து அரசொன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் அவசர கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் கூட்டமைப்பால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகமாக உயர்ந்துள்ளன. அதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையும் நிலவுகின்றது. இதனால் ஒரு நாளில் பல மணித்தியாலங்கள் மின்சாரத் தடையும் ஏற்படுகின்றது.
இதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகவும், அவரைப் பதவி விலகுமாறு வலியுறுத்தியும் மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய அமைச்சரவையைக் கலைத்து, அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசொன்றை அமைக்குமாறு ஆளுந்தரப்பைச் சேர்ந்த 11 கட்சிகளின் பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் அவசர கோாிக்கை முன்வைத்துள்ளனர்.
#SriLankaNews
Leave a comment