நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நீண்ட கால வீசா தொடர்பில் மாற்றம் மேற்கொள்ள அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
நீண்ட கால வீசா வழங்குதல் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பிட்த்த ஜோசனைக்கு அமைவாக அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ´
தங்க சுவர்க்க வீசா நிகழ்ச்சித்திட்டம்´ எனும் திட்டத்தின் கீழ், இலங்கை மத்திய வங்கியால் அங்கீகாரமளிக்கப்பட்ட வணிக வங்கியொன்றில் குறைந்தது ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வதிவிட வீசா.
கூட்டு ஆதனங்களின் பெறுமதி குறைந்தபட்சம் 75 ஆயிரம் அமெரிக்க டொலர் அல்லது அதற்கு மேலதிகமாக முதலீடு செய்கின்ற வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டுக் கம்பனிகளின் இயக்குநர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோருக்கு முதலிடுகின்ற அமெரிக்க டொலரின் அளவுக்கமைய 5 ஆண்டுகள் தொடக்கம் 10 ஆண்டுகள் வரையான நீண்டகால வதிவிட வீசா.
ஆகிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கு அமைச்ஜ்ஹச்சரை அனுமதி வழங்கியுள்ளது.
#SriLankaNews

