தென்னை மரம் முறிந்து 10 மாணவர்கள் வைத்தியசாலையில்!

IMG 20220615 WA0024

பாடசாலை கட்டடம் மீது தென்னை மரமொன்று முறிந்து விழுந்ததால் காயமடைந்த 10 மாணவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெலிமடை இந்துக் கல்லூரில் இன்று புதன்கிழமை காலை இவ்வனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலைக்கு பக்கத்து காணியில் இருந்த தென்னை மரமொன்று முறிந்து வகுப்பறையின் மீது விழுந்துள்ளது.

இதனால் தரம் 6 இல் கல்வி கற்கும் 10 மாணவர்கள் காயமடைந்து வெலிமட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வெலிமடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

 

 

Exit mobile version