ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 10 உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்துத் தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும் என அந்தக் கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள தற்போதைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு உறுதியான அரசியல் மற்றும் பொருளாதாரத் திட்டத்தைச் செயற்படுத்த ஒப்புக்கொள்ளும் எதிர்க்கட்சிகள் உட்பட, புதிய அனைத்துக் கட்சிகளையும் இணைத்து இவ்வாறு புதிய அமைச்சரவையை நியமிக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment