கிளிநொச்சியில் வீசிய திடீர் சுழற் காற்றால் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் ஒரு ஓட்டோவும் பெரும் சேதமடைந்துள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள கிருஸ்ணபுரம், செல்வாநகர்ப் பகுதிகளில் இன்று மாலை திடீரென மழையுடன் கூடிய சுழற் காற்று வீசியது.
இதன்போது இரு கிராமங்களிலும் 10 வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதோடு அருகில் நின்ற மரங்களும் முறிந்து வீடுகளின் மீது வீழ்ந்தன.
இதன்போது பாரிய மரம் ஒன்றின் பெரும் கிளை முறிந்து ஓட்டோ ஒன்றின் மீது வீழ்ந்தமையால் அந்த ஓட்டோவும் பெரும் சேதம் அடைந்துள்ளது.
#SriLankaNews
Leave a comment