நாட்டில் அடுத்த வாரம் தொடக்கம் 10 மணிநேர மின் வெட்டு?

மின் வெட்டு

நாட்டில் அடுத்த வாரம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் காலப்பகுதியை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டில் தற்போது 6 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதிக்கு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், குறித்த காலப்பகுதியை 10 மணித்தியாலங்களாக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனச் சிங்கள ஊடகமொன்று உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி குறித்த நடவடிக்கை அடுத்த வாரம் முதல் அமுல்படுத்தப்படும் சாத்தியம் காணப்படுகின்றது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்மின் உற்பத்திக்கான பற்றாக்குறை ஆகிய காரணங்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version