tamilni 120 scaled
இலங்கைசெய்திகள்

ரணில் தலைமையில் நடந்த பொது நிகழ்வுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு

Share

ரணில் தலைமையில் நடந்த பொது நிகழ்வுக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு

ஜனாதிபதி தலைமையில் 10,000 காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வுக்கு வந்த மக்களுக்கு உணவு வழங்க ஒன்றரை கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தம்புள்ளைக்கு வந்த பஸ் ஒன்றுக்கு 40,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், பொலன்னறுவை, திருகோணமலை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 10,000 பேர் தம்புள்ளைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்க 15 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

உணவுக்காக ஒருவருக்கு 1500 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தம்புள்ளைக்கு வந்த மக்களுக்கு உணவு மட்டுமன்றி போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடியான நிலையில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள் ஊடாக ஏற்பாடு செய்திருக்கலாம்.

இதன்போது மக்களுக்கு உரையாற்றி காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியிருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 1 9
செய்திகள்இலங்கை

இலங்கையில் தடைசெய்யப்பட்ட 22 பிரமிட் திட்ட நிறுவனங்கள்: மத்திய வங்கி புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியீடு!

திருத்தப்பட்ட 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ், இலங்கையில் தடைசெய்யப்பட்டதாகத்...

23 653b1b00374ea
செய்திகள்இலங்கை

கனடாவில் பண்ணைத் தொழில் மோசடி: 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஓய்வுபெற்ற முகாமையாளர் கைது!

கனடாவிலுள்ள பண்ணைகளில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, 5.2 மில்லியன் ரூபாய் மோசடி செய்த ஒருவரை...

articles2FVFDlEfI4swqtBBAERP54
செய்திகள்உலகம்

சிலியில் கடுமையான பனிப்புயல்: 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு!

சிலியில் நிலவிய கடுமையான பனிப்புயலில் சிக்கி வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 05 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக...

image aa5ec14948
அரசியல்இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு: ‘பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது, புதிய தீர்வுக்கு ஒத்துழைப்பு தேவை’

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக்...