வேகக் கட்டுப்பாட்டை இழுந்து மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்!

WhatsApp Image 2022 03 20 at 5.16.19 PM

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வேலி கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் கூடத்து மனோன்மணி அம்மன் ஆலயத்திற்கும் ஏழாம் கட்டை பகுதிக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரே படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

படுகாயமடைந்த நபர் அவசர ஆம்புலன்ஸ் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் .

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். விபத்தின்போது படுகாயமடைந்த நபர் தலைக்கவசம் அணியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version