சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சண்டிலிப்பாய் – தொட்டிலடி வீதியில் கனரக வாகனத் திருத்தகம் ஒன்றினால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியிருக்கின்றார்கள்.
இந்த திருத்தகத்தில் பஸ்,லொறி,டிப்பர் போன்ற வாகனங்கள் திருத்தப்படுகின்றது. ஆனால் வீதியில் வைத்து இவை பழுதுபார்க்கப்படுவதால் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகி வருகின்றார்கள்.
இதற்கு அருகில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி ,சண்டிலிப்பாய் இந்து ஆரம்ப பாடசாலை அமைந்துள்ளது. இப்பாட சாலை மாணவர்கள் உட்பட பல நூற்றுக் கணக்கானோர் அன்றாடம் இவ்வீதியினை பயன்படுத்திவருகிறார்கள்.
இவ்வீதியானது ஒடுங்கிய அகலம் குறைந்த வீதியாக காணப்படுவதால் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தினை மக்கள் எதிர் நோக்கவேண்டியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயத்தில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் உடனடி நடவடிக்கை எடுத்து அகற்றி பொருத்தமான இடத்திற்கு மாற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
#SrilankaNews
Leave a comment