கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் 552 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணைக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், உயிரிழந்தவர்களில் 469 பேர் தண்டனை பெற்ற கைதிகள் என்பதுடன், உயிரிழந்த கைதிகளில், 384 பேர் ஐஸ், ஹெரோயின் அல்லது பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்த, விற்ற அல்லது வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் இருந்தவர்களாவர்.
இந்த நிலையில், தடயவியல் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக, கடந்த ஆண்டு இறுதிக்குள் 15,117 சந்தேகநபர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.