வர்த்தக நிலையத்துக்குள் பெற்றோல் குண்டு வீச்சு!!
யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில், ஆடியபாதம் வீதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்து நொருக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை 6.45 மணியளவில் நடந்துள்ளது. இலக்கத் தகடு மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டவர்களைக் கொண்ட கும்பலே வன்முறையில் ஈடுபட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தில் இருந்த பொருள்களை அடித்து நொருக்கியதுடன், பெற்றோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
Leave a comment