வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா

savendra

வர்த்தக நிலையங்களை மூடுவதால் பயனில்லை – சவேந்திர சில்வா

வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய சூழ்நிலை உணர்ந்து வர்த்தகர்கள், தங்களது வர்த்தக நிலையங்களை சுயமாக மூடியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் சாதாரண மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவது அவசியமாகும்.

வர்த்தக நிலையங்களை மூடியுள்ளமையால் ஒருசில இடங்களில், நுகர்வோர் பொருள்களை கொள்வனவு செய்வதற்காக வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கு செல்கிறார்கள். ஆகவே வர்த்தக நிலையங்களை சுயமாக மூடுவதால் எவ்வித பயனும் கிடையாது என சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version