வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் – செம்மணி வீதியில் அமைந்துள்ள வடக்கு மாகாண கல்வி அமைச்சின் வாயிலில் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாம், தமது நியமனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்காக நேற்றைய தினம் அமைச்சுக்கு சென்றிருந்த நிலையில், அதற்கான பதில் கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் அவர்கள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் முன்பாக குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொண்டராசிரியர்கள், அலுவலகத்திற்கு வருகை வந்த உத்தியோகத்தர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து, பொலிஸாரின் தலையீட்டினால் அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
#SriLankaNews