25 679089b7919b1
இலங்கைசெய்திகள்

ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

Share

ரணில் விக்ரமசிங்கவை லண்டனில் வைத்து கைது செய்ய முயலும் அமைப்புக்கள்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) ஜனவரி மாத இறுதியில் லண்டனுக்கு (London) விஜயம் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக கைது உத்தரவை பெற்றுக்கொள்வதற்கு இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் செயற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயமானது ஆங்கில இணையம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

1980களின் பிற்பகுதியில், குறிப்பாக பட்டலந்த சித்திரவதைக் கூடங்களுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் விக்ரமசிங்க ஈடுபட்டதாக இந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்தநிலையில் அவருக்கு எதிரான கைது உத்தரவுக்கான முயற்சி, உலகளாவிய அதிகார வரம்பு என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது என்று குறித்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

சித்திரவதை போன்ற கடுமையான சர்வதேச குற்றங்களை தனிநபர்கள், எங்கு மேற்கொண்டிருந்தாலும், இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் உள்ள நீதிமன்றங்களில், அவர்கள் மீது வழக்குத் தொடர அனுமதிக்கும் ஒரு சட்டக் கோட்பாடாக இது அமைந்துள்ளது.

இந்த நடவடிக்கை, முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்டோ பினோசேவின் வழக்குடன் இணையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது ஆட்சியின் குற்றங்களுக்காக அவர் 1998 இல் லண்டனில் உலகளாவிய அதிகார வரம்பின் கீழ் கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக, உலகத் தலைவர்களை அவர்களின் பதவிக்காலத்தில் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்களுக்குப் பொறுப்பேற்க வைப்பதில் இந்த உலகளாவிய அதிகார வரம்பு சட்டம் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அருகிலுள்ள பியகம தொகுதியில் அமைந்துள்ள பட்டலந்த தடுப்பு மையம், இலங்கையின் 1987–1989 மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கிளர்ச்சியின் போது பேசப்பட்ட ஒன்றாக இருந்தது.

அரசாங்கத்திற்கு எதிராக வன்முறை கிளர்ச்சியை வழிநடத்திய மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் குழுவான ஜே.வி.பி.யுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படுவோரை தடுத்து வைக்க, விசாரிக்க மற்றும் சித்திரவதை செய்ய  இலங்கை பொலிஸின் நாசவேலை எதிர்ப் பிரிவு, இந்த முகாமை பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

எனினும் இந்த குற்றச்சாட்டில் அப்போதைய அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க, தம்மீதான நேரடி குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...