5 59
இலங்கைசெய்திகள்

யாழ். பல்கலை கலைப்பீட மாணவர் ஒன்றிய முக்கியஸ்தர்கள் பதவி விலகல்

Share

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 24, 25ஆம் திகதிகள் ஜனவரி மாதம் மாணவர்கள் மீதான பழிவாங்குதல்கள் மற்றும் கற்றல் உரிமைகளிற்காக உண்ணாவிரதப் போராட்டம் மாணவர்களினால் ஜனநாயக வழியில் நடைபெற்றது.

எனினும் அந்த போராட்டத்தினை திசை திருப்பும் வகையிலும், திரிபுபடுத்தும் வகையிலும் அதற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் Drugs பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள் எனும் பொய்யான செய்தி ஒரு சிலரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மாணவர்களின் கருத்தாகச் சித்தரித்து ஊடக சந்திப்புக்களில் பரப்பபட்டு வருகின்றது.

எமது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒன்றியப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகத்தின் மாண்பு என்பவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயல்களையும் முற்றாக மறுக்கின்றோம்.

கலைப்பீடத்தின் அனைத்து அணி மாணவர்களும் தமது முழுமையான எதிர்ப்பினையும் கண்டனங்களையும் இச்செயல்களிற்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் மற்றும் இளம் பொருளாளர் பொறுப்புக்களிலிருந்து கூட்டாக விலகி நாங்களும் எமது கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எவ்வித அடிப்படை ஆதரங்களுமற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக பொய்யான செய்திகளைப் பரப்பும் நபர்களின் மீது உடனடி மற்றும் விரைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் உரிய தரப்பினரை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியும் உரிமை தமிழர்களுக்கு உண்டு: காணாமல் போனோர் விவகாரத்தில் அமைச்சர் ஹர்ஷன அதிரடி!

காணாமல் போனோர் விவகாரத்தில் எவரையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

Austrian accident 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தெற்கு அதிவேக வீதியில் கார் கவிழ்ந்து விபத்து: வத்தளையைச் சேர்ந்த பெண் பலி! இருவர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் நேற்று (24) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் பெண் ஒருவர்...

MediaFile 4 3
செய்திகள்உலகம்

சீனாவுடன் கைக்கோர்த்தால் 100% வரி: கனடாவுக்கு ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

கனடா மற்றும் சீனா இடையிலான புதிய வர்த்தக உறவுகள் காரணமாக, அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவில்...

MediaFile 3 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியாவில் உறைபனி மற்றும் குளு குளு காலநிலை: விடுமுறை தினத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!

மலையகத்தின் வசந்தபுரி என அழைக்கப்படும் நுவரெலியாவில் தற்போது நிலவி வரும் மாறுபட்ட மற்றும் இதமான காலநிலை...