நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலையில், மோதல் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இராணுவ சிப்பாய்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
#SriLankaNews