யாழில் வாள்வெட்டு: மூவர் படுகாயம்!!
யாழ்ப்பாணம், பாசையூரில் நேற்று (22) மாலை நடந்த வாள் வெட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
குருநகர் கடற்கரை வீதியில் உள்ள திருச்சிலுவை வைத்தியசாலைக்கு அருகே இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரை, மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நால்வர் தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர்களும், தாக்குதல் நடத்தியவர்களும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மூவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a comment