யாழில் கொவிட் தொற்றால் இருவர் சாவு!!
யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஞாயிற்றுக்கிழமை இருவர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த திருநெல்வேலி மேற்கைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவரும், சண்டிலிப்பாயைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகளுடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
Leave a comment