முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

are 2

Law and order concept. Handcuffs, gavel on book on a wooden background, top view

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரர் ஆவார்.

மதுபான உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, வீரகெட்டியாவைச் சேர்ந்த ஒருவரிடம் 27.5 மில்லியன் ரூபாயைப் பெற்றதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் (CCIB) முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டிற்கு அமைவாக, விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், நேற்றைய தினம் காலை ஹங்குரன்கெத்த பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version