images 2
அரசியல்இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்துங்கள்: அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச வலியுறுத்தல்!

Share

கம்பஹா – திஹாரிய பகுதியில் இன்று (08) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் நீண்டகாலமாகத் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் உரிமையைப் பெறாமல் உள்ளனர். எனவே, அரசாங்கம் உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்தி அவர்களுக்குரிய அதிகாரத்தை வழங்க வேண்டும்.

நாட்டில் அடுத்து எந்தத் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதனை எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முழுமையாகத் தயாராக உள்ளது.

தேர்தலை இலக்காகக் கொண்டு கிராமிய மட்டத்திலான அரசியல் குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எதிர்வரும் தேர்தல்களில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இதுவரை எவ்வித இறுதி முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். தற்போது கட்சியைத் தனித்துவமாகப் பலப்படுத்துவதிலேயே கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்கள் நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுஜன பெரமுனவின் இந்தத் திடீர் வலியுறுத்தல் அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

 

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...