மாகாணப் போக்குவரத்து இடைநிறுத்தம்!!
எதிர்வரும் 15 ஆம் திகதியிலிருந்து பொது இடங்களில் நடமாடுபவர்கள் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதை அட்தாட்சிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை தம்வசம் வைத்திருத்தல் வேண்டும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தும் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போது அம
அமுலிலுள்ள சுகாதார வழிகாட்டல்கள் மேலும் இறுக்கமாக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
வங்கி, விவசாயம், ஆடைத் தொழிற்சாலை, சுற்றுலாத்துறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாகப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Leave a comment