மயங்கி வீழ்ந்து இறந்த பெண்ணுக்கு தொற்று உறுதி
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மூளாய் வீதி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கணேசலிங்கம்ஜெயமலர் (வயது – 61) என்பவரே உயிரிழந்தவராவார்.
இவர், தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்துதுள்ளார். அது அண்மையில் உயிரிழந்துவிட்டது. அது இறந்த கவலையில் குறித்த குடும்பப்பெண் சுமார் 5 நாள்களாக சாப்பிடாமல் தண்ணீர் மற்றும் மென்பானம் மாத்திரம் அருந்திவந்துள்ளார். இந்தநிலையில், நேற்றுஅதிகாலை அவர் வீட்டிலேயே மயங்கியுள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் உயிரிழந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின்படி அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Leave a comment