மன்னாரில் நேற்று மட்டும் 46 தொற்றாளர்கள்!!
மன்னாரில் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தை சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அங்கு கடமையாற்றுபவர்கள் 26 பேர் உட்பட மொத்தம் 46 பேருக்கு நேற்றையதினம் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இன்று (22) காலை விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
46 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 26 கொரோனாத் தொற்றாளர்கள் மன்னார் திருக்கேதீஸ்வரம் சிவன் அருள் இல்லத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மற்றும் அங்கு கடமையாற்றுபவர்கள்.
ஏனையவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை, முருங்கன் வைத்தியசாலை, அடம்பன் வைத்தியசாலை, பேசாலை வைத்தியசாலை, விடத்தல் தீவு வைத்தியசாலை, மாந்தை மேற்கு மற்றும் நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Leave a comment